உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அணைக்கட்டு அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2022-04-19 15:47 IST   |   Update On 2022-04-19 15:47:00 IST
அணைக்கட்டு அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை மோட்டூர் பகுதியை சோர்ந்தவர் அம்பிகா (வயது 63). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய நிலத்தில் விளைந்த உளுந்தை சாலையில் காய வைத்துவிட்டு வீட்டின் அருகே அமர்ந்து உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த 25 வயதுடைய 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்களில் ஒரு வாலிபர் அம்பிகாவுடன் அமர்ந்திருந்த உறவினரை தண்ணி எடுத்து வரும்படி வீட்டுக்குள் அனுப்பியுள்ளார்.

இந்த நேரத்தில் அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை அந்த வாலிபர் திடீரென பறித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அம்பிகா நகையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் 2 பவுன் நகை அவருடைய கையில் சிக்கிக் கொண்டது.

5 பவுனை அந்த வாலிபர் பறித்து கொண்டு பைக்கில் தயார் நிலையில் இருந்த மற்றொரு வாலிபருடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். 

இதுகுறித்து அம்பிகா அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறதா என ஆய்வு போலீசார்  செய்தனர்.

மேலும் இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News