உள்ளூர் செய்திகள்
அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை படத்தில் காணலாம்.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த பொது மக்கள் விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-04-19 15:35 IST   |   Update On 2022-04-19 15:35:00 IST
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
ஓசூர்,

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

ஒசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக   கனமாகவும், பரவலாகவும் மழை பெய்து வருகிறது.

மேலும்,கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக ஒசூர்  கெலவரப்பள்ளி  அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28அடிகளாகும். அணையில் 39.52 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், இன்று காலை,அணைக்கு  வினாடிக்கு 353 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு 408 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

கடந்த 3 மாதங்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்த அளவாகவே  இருந்த நிலையில், கனமழை எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது, மழை மேலும் தொடரும் என்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்திருப்பதால், அணை முழுவதும் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும்,விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News