உள்ளூர் செய்திகள்
சங்கராபுரத்தில் தண்ணீர் தொட்டியில் கிடந்த சாரைப்பாம்பு மீட்பு
சங்கராபுரத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்த சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குப்புமுதலி தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டு கட்டிடத்தின் உட்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று இருந்ததை அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் இருந்த சாரைப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.