உள்ளூர் செய்திகள்
தூத்தூர் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்த விஜய் வசந்த் எம்.பி.
கடலோர மக்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் பல்வேறு தேவைகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. கேட்டறிந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தூத்தூர் கடற்கரை பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடலோர மக்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் பல்வேறு தேவைகள் குறித்து கலந்தாய்வு செய்தார்.
கடல் தடுப்பு சுவர் அமைத்தல், தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகம் மறுசீரமைப்பு, பழுதடைந்த நிலையில் தொடரும் இரவிபுத்தன்துறை - வள்ளவிளை சாலை சீரமைப்பு போன்ற தேவைகளை கேட்டறிந்தார்.