உள்ளூர் செய்திகள்
விபத்து

பகண்டை கூட்டுரோட்டில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து

Published On 2022-04-18 16:25 IST   |   Update On 2022-04-18 16:25:00 IST
சங்கராபுரம் திருக்கோவிலூர் சாலையில் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள வன புற்று மாரியம்மன் கோவில் அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் இன்று காலை ரிஷிவந்தியம் அடுத்த சாத்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மற்றும் அவருடன் இரண்டு நபர்களும் மழையின் காரணமாக சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள மின் கோபுரத்தை ஆய்வு செய்து திரும்பினர்.

சங்கராபுரம் திருக்கோவிலூர் சாலையில் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள வன புற்று மாரியம்மன் கோவில் அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அப்போது வேகமாக வந்த கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் 2 மின் கம்பங்கள் சரிந்தன. அப்போது அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நேற்று இடியுடன் கனத்த மழை பெய்து மின்சாரம் துண்டிக்கப்ட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Similar News