உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை சேர்ந்த முறுக்கு வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து பஞ்சம் பிழைக்க 20 குடும்பங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் நகருக்கு வந்தோம். கடந்த 1995&ம் ஆண்டு முதல் வறுமை கோட்டுக்கு கீழ் வசித்து வருகிறோம்.
முறுக்கு வணிகம் செய்து வாழ்ந்து வருகிறோம் நாங்கள் 20 குடும்பங்கள் வீட்டுவரி, மின் கட்டணம் ஆகியவற்றை முறையாகக் கட்டி வருகிறோம்.
தற்போது மாவட்ட நிர்வாகம் கட்டளைப்படி குடி இருந்த வீட்டை காலி செய்யுங்கள் என அதிகாரிகள் கூறியதன்படி நாங்கள் இடத்தை காலி செய்து விட்டோம். இதுவரை எங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.
இதனால் சுமார் 20 வணிகக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு மாற்றி இடம் வழங்கி எங்கள் குடும்பத்திற்கு வாழ்வளிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.