உள்ளூர் செய்திகள்
முதலாம் ஆண்டு டேக்வாண்டோ அறிமுகப் போட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலாம் ஆண்டு டேக்வாண்டோ அறிமுகப் போட்டி நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் டேக்வாண்டோ போட்டியானது மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலாம் ஆண்டு அறிமுக போட்டியாக நடைபெற்றது.
இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 12 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் உடல் எடை வாரியாக பிரிக்கப்பட்டு 36 பிரிவுகளின்கீழ் போட்டி நடத்தப்பட்டது, ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சீர்காழி டி.எஸ்.பி லாமேக் பதக்கங்களை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்ட டேக்வாண்டோ சங்கத் தலைவர் ராஜ்கமல் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளரும், தலைமை பயிற்சியாளருமான கலைவேந்தன், பொது செயலாளர் செல்வமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாந்தி, உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் ஸ்டாலின் பலர் கலந்து கொண்டனர்.