உள்ளூர் செய்திகள்
டிராக்டர் மூலம் உழவு செய்ய மானியம் - விவசாயிகள் எதிர்பார்ப்பு
தனியார் டிராக்டர் மூலம் உழவுப்பணி மேற்கொள்ள செலவு அதிகமாகிறது.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. இந்த சமயத்தில் விவசாயிகள் வாழை, மரவள்ளி, நிலக்கடலை, சின்ன வெங்காயம், காய்கறி உள்ளிட்ட பலவகை பயிர்களை சாகுபடி செய்வார்கள். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
டிராக்டர், ரோட்டோவேட்டர் மூலம் விவசாய நிலங்களில் உழவுப்பணி மேற்கொள்வோம். தனியார் டிராக்டர் மூலம் உழவுப்பணி மேற்கொள்ள செலவு அதிகமாகிறது. இடுபொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது.
எனவே, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கோடை உழவு மேற்கொள்ள விவசாய நிலங்களில், டிராக்டர் மூலம் உழவு செய்வதற்கு மானியம் வழங்க வேண்டும். இதன் மூலம், விவசாயிகளின் பொருளாதார சுமை ஓரளவு குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.