உள்ளூர் செய்திகள்
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அரியலூர்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராசன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை பெலிக்ஸ் சாமுவேல் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயர்கள், பங்குதந்தையர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உயிர்ப்பு பவனியும் நடந்தது.
இந்த திருப்பலி மற்றும் ஆராதனைகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். திருப்பலிக்கு பின் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். தவக்காலத்திற்கு பின் வெகுவிமரிசையாக கொணடாடப்பட்ட ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்த்தவர்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தென்னூர் அன்னை லூர்து ஆலயத்தில் பங்குத்தந்தையர் லியோ நெல்லூஸ்ராஜா தலைமையில் பங்குத் தந்தையர்கள் சிறப்பு திருப்பலி, ஆராதனைகளை நடத்தினர். கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதே போல் ஏலாக்குறிச்சி புனித அன்னை ஆலாயம், ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயம், அரியலூரிலுள்ள புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ ஆலயம், திருமானூர் புனித அருளானந்தார் ஆலயம், புதுக்கோட்டை தூய மங்களமாத ஆலயம், குலமாணிக்கம், கோக்குடி கிராமங்களிலுள்ள புனித இஞ்ஞாசியர் ஆலயம் மற்றும் செந்துறை, மீன்சுருட்டி, உடையார்பாளையம், கீழப்பழுவூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேவலாயங்களில் பங்கு தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.