உள்ளூர் செய்திகள்
இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற காட்சி.

2575 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

Published On 2022-04-18 15:35 IST   |   Update On 2022-04-18 15:35:00 IST
2575 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில்  ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 2575 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2003 முதல் 2013ம் ஆண்டு வரை மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்த காணொலி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், இலுப்பூர், விராலிமலை, புனல்குளம், மாத்தூர், அறந்தாங்கி, ஆலங்குடி, அம்மாசத்திரம், திருமயம் ஆகிய 9 இடங்களில் காணொலிக் காட்சி மூலம் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதா ராமு, மின்வாரிய மேற்பார்வையாளர்  (பொ) அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்டத்தில் 2575 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

Similar News