உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

காலி நிலத்தில் கழிவுகளை கொட்டிய லாரி டிரைவர் சஸ்பெண்டு

Published On 2022-04-18 15:29 IST   |   Update On 2022-04-18 15:29:00 IST
திருச்சியில் தனியாருக்கு சொந்தமான காலி நிலத்தில் குப்பை கழிவுகளை கொட்டிய லாரி டிரைவரை சஸ்பெண்டு செய்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
திருச்சி:

திருச்சி மாநகராட்சியில் செல்வா (வயது 28) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் திருச்சி டோல்கேட் பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

பின்னர் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொண்டுபோய்  கொட்டுவதற்கு பதிலாக அருகாமையில் மன்னார்புரத்தில் உள்ள ஒரு தனியார் காலி நிலத்தில் கொட்டிவிட்டார்.

இதுபற்றி மாநகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த லாரி டிரைவர் செல்வாவை கமிஷனர் பி.எம்.என். முஜிபுர் ரகுமான் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் நில உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் மாநகராட்சி டிரைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News