உள்ளூர் செய்திகள்
வள்ளலார் கோவிலில் திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை டவுன் சேந்தங்குடி ஞானாம்பிகை உடனாகிய வதாரன்-யேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜைக்கு தர்மபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல் ஆசியுடன், சிவகுருநாத தம்பிரான் முன்னிலையில் தலைமை
அர்ச்சகர் சிவஸ்ரீ பாலச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.சித்ரா பவுர்ணமி என்பது மயிலாடுதுறை மாவட்டத்திற்க்கே
பெருமை பெற்றது. சித்ரா பவுர்ணமி அன்று இந்திர விழா தனி சிறப்பானது. அதனடிப்படையில் துர்கா, சரஸ்வதி, தீப பூஜை சுமங்கலி பெண்கள் நடத்தியுள்ளனர். இது உலக நன்மைக்காகவும்,
குடும்பங்கள் வளம் பெறவும் மகிழ்ச்சி அடையவும் கூட்டுப் பிரார்த்தனை வழிபாடு செய்யப்பட்டுள்ளது.இதில் ஏ.ஆர்.சி. சண்முகம் ஜுவல்லரி உரிமையாளர் கீதா மோகன், சேலை உள்ளிட்ட மங்களப்
பொருட்கள் அடங்கிய பேக்கை திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலிகளுக்கு வழங்கினார். கோவில் கண்காணிப்பாளர் அகோரம், நகரமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.