உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 88 சதவீதமாக அதிகரிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை மேல் அங்கி அணிவிக்கும் விழா-வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்-துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய-தாவது:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமையப்-பெற்றது இந்த மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாகும். கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதல்&-அமைச்சர், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதற்கான அனுமதி பெற்று இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. சமீபத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் மட்டும் கட்டி முடிக்கப்பட்டு, தமிழக முதல் அமைச்சர் முன்னிலையில் பிரதமர் திறந்து வைத்தார். ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மேலும் இந்த கல்லூரிக்கு தேவையான கூடுதல் திட்ட மதிப்பீடு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியை சுமார் 40 ஏக்கர் பரப்-பளவில் மொத்தம் ரூ.461 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 534 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் முன்னிலையில் பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கையடக்க மடிக்கணினிகள் ஒரு வாரத்திற்குள் வழங்கும் திட்டம் உள்ளது.
மேலும் டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை தினசரி பாதிப்பு 50-க்கும் கீழேயே உள்ளது. மேலும் தமிழகத்தில் தினசரி இறப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது 88 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.