உள்ளூர் செய்திகள்
மருந்துவாழ் மலையில் கிரிவலம் நடந்தது.
நாகர்கோவில்:
மருந்துவாழ் மலையில் அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்தின் 54-வது பவுர்ணமி நாளில் அய்யாவுக்கு பணிவிடையும், 108 முறை அய்யா சிவசிவ அரகரா மந்திரமும் கிரிவலமும் நடந்தது.
இதில் தலைவர் வைகுண்டமணி, பொருளாளர் நிறுவனர் செல்வகுமார், இணை செயலாளர் ரெத்தினசாமி, துணை செயலாளர் வைகுண்டராஜா, துணை பொருளாளர் அருந்ததி, நிர்வாகிகள் நாகராஜன், ராமச்சந்திரன், வசுகி,
வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர் விமலா சரவணன், அமுதா ராஜன், கவுரவ ஆலோசகர் சந்திரசேகர், மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதர்மம் நடந்தது.