உள்ளூர் செய்திகள்
வாரிசுக்கு வேலை வழங்க கோரி சாலை பராமரிப்பு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
வாரிசுக்கு வேலை வழங்க கோரி சாலை பராமரிப்பு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
பள்ளிபாளையம்:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட பேரவைக்கூட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த அலமேடு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் தங்கவேல் வவேற்றார்.
கூட்டத்தில் மாநில தலைவர் வைரவன், மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் சிறப்புரைஆற்றினார்கள்.
கூட்டத்தில், இறந்த சாலைப்பணியாளர் குடும்பங்களுக்கு விதிமுறைகளை தளர்த்தி வாரிசு வேலை வழங்க வேண்டும்.சாலை ஆய்வாளர், இரவு காவலர், அலுவல உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை சாலைப்பணியாளர்களை கொண்டு வயது மூப்பின் படி உடனடியாக நிரப்பிட வேண்டும்.
சாலை பணியாளர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி வரும் நிலையில், 2022 ஏப்ரல் முதல் தேர்வு நிலை பணியாளராக தகுதி உயர்த்தி 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில துணைதலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அரிமயில் சங்கர், மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.