உள்ளூர் செய்திகள்
பருவாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
கலெக்டர் உத்தரவின்படி விரைவில் ஆக்கிரமிப்புஅகற்றப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
பல்லடம் வட்டாரத்தில் கரடிவாவி, சாமளாபுரம் பகுதியிலுள்ள குட்டைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள், சமீபத்தில் அகற்றப்பட்டன. எதிர்ப்புகள் இருந்தபோதும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபின், வீடு இல்லாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
ஐகோர்ட்டு உத்தரவின்படி அடுத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் தயாராகி வருகின்றனர். பல்லடம் அருகே ராயர்பாளையம் செங்குட்டை, வெட்டுப்பட்டான்குட்டை, ஸ்டாலின் நகர், பருவாய் மற்றும் பல்லடம் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட உள்ளன.
இது குறித்து குடியிருப்பினருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டதால் கலெக்டர் உத்தரவின் படி விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.