உள்ளூர் செய்திகள்
திருவட்டாரில் பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது
திருவட்டாரில் பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே புன்னைக்காடு, சாமியார்மடம் பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று இரவு சாமியார்மடம் ஆர்.சி சர்ச் அருகில் மறைந்து இருந்து அந்த பகுதியில் வந்த ஒரு நபரை பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து ரெதீசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரெதீஷ் மீது திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்ச்சி, வழிப்பறி, அடிதடி போன்ற 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
போலீஸ் நிலையத்தில் குற்ற பதிவேட்டிலும் ரவுடி பட்டியலில் இவர் பெயர் உள்ளது. மேலும் திருவட்டார், தக்கலை, குலசேகரம் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ரெதீசை போலீசார் தக்கலை கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.