வண்டலூர் அருகே தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்த மான் மீட்பு- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
வண்டலூர்:
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை ஒட்டி காப்பு காடுகள் உள்ளன. இதில் எராளமான மான்கள் உள்ளன. இவை கோடை காலங்களில் ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் தேடி வருவது வழக்கம்.
இந்தநிலையில், வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் கிராமம், விகாஸ் அவென்யூ பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் தண்ணீரைத் தேடி ஊனமாஞ்சேரி வன காப்பு காட்டில் இருந்து புள்ளி மான் இன்று காலை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் புள்ளிமானை லாவகமான மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
வனத்துறை ஊழியர்கள் புள்ளி மானை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட புள்ளிமானை பார்க்க அப்பகுதிமக்கள ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.