உள்ளூர் செய்திகள்
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெரியகுளத்தில் இலவச மருத்துவ முகாம்

Published On 2022-04-18 11:57 IST   |   Update On 2022-04-18 11:57:00 IST
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
பெரியகுளம்:

பெரியகுளத்தில் வரும் முன் காப்போம் திட்டம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்தின்  80ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு ஆலோசனைஉள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை மற்றும் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது.

இதில் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், டாக்டர் வெங்கடேஷ், எலும்பு முறிவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முத்துகுகன், பொது மருத்துவர் கோமதி, பெரியகுளம் வர்த்தக சங்கத் தலைவர் சிதம்பர சூரியவேலு, செட் பவுண்டேசன் நித்தியானந்தம்,  நகர் நல சங்க செயலாளர் அன்புக்கரசன் நகர் வியாபாரிகள், சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் ராஜவேலு, நேசம் தொண்டு நிறுவனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News