உள்ளூர் செய்திகள்
மது குடித்து விட்டு ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது
கிழக்கு கடற்கரை சாலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மதுக்கடை அருகே மது குடித்து விட்டு 3 வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறாக ஆபாச வார்த் தைகளால் பேசி ரகளை செய்வதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை மெயின் ரோடு புதுப்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி(19), விஜயகுமார்(19), மதன்(18), என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது போல் கோரிமேடு இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பொது இடத்தில் மது குடித்து விட்டு கத்தியுடன் ரகளை செய்த சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்த பூபதி(23), மற்றும் திலாஸ்பேட்டை கருணாஜோதி தெருவை சேர்ந்த லட்சுமணன்(20), ஆகிய 2 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.