உள்ளூர் செய்திகள்
மத்திய அரசின் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
மத்திய அரசின் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கூனிச்சம்பட்டில் நடந்தது.
புதுவை மாநில பா.ஜனதா வர்த்தக பிரிவு தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். பா.ஜனதா காப்பீடு திட்ட புதுவை பொறுப்பாளர் ஜெயக்குமார் மத்திய அரசு காப்பீட்டு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். கூட்டத்தில் தொகுதி மண்டல பொறுப்பாளர் கண்ணன், நிர்வாகிகள் லோகு, வேதாச்சலம், சேகர், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.