உள்ளூர் செய்திகள்
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய சிறைத்துறை டி.ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன்.

வேலூரில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி

Update: 2022-04-17 09:36 GMT
வேலூரில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
வேலூர்:

வேலூர் டோல்கேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜப்பான் ஷிட்டோ&ரியோ சார்பில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி இன்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன், கராத்தே வீரர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.

ஹாய், கட்டா 2 பிரிவுகளில் அனைத்து வயது பிரிவினருக்கான கராத்தே போட்டி நடந்தது. போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட இந்தியாவில் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். 

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கராத்தே ரமேஷ் பயிற்சியாளர் லட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News