உள்ளூர் செய்திகள்
வங்கி நுழைவு வாயிலில் மோதி கவிழ்ந்த லாரி

ஊரப்பாக்கத்தில் வங்கியின் நுழைவு வாயிலில் மோதி கவிழ்ந்த லாரி

Published On 2022-04-17 12:11 IST   |   Update On 2022-04-17 12:11:00 IST
மேட்டூர் டிராவல்ஸ் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜி.எஸ்.டி.சாலையில் அமைந்துள்ள வங்கியின் நுழைவு வாயில் மீது மோதி கவிழ்ந்தது.

வண்டலூர்:

வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி சந்திப்பில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு சாலையை நோக்கி சென்று கொண்டிருந்த மேட்டூர் டிராவல்ஸ் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜி.எஸ்.டி.சாலையில் அமைந்துள்ள வங்கியின் நுழைவு வாயில் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் அதிஷ்டவசமாக லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் வங்கி காவலாளியும் நுழைவு வாயிலில் இருந்து சற்று தள்ளி தொலைவில் இருந்ததால் அவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Similar News