உள்ளூர் செய்திகள்
ரத்ததான முகாமை தொடங்கி வைத்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

Update: 2022-04-16 08:32 GMT
சீர்காழி அரசு மருத்துவமனையில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ரத்ததான முகாமை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சீர்காழி:

சீர்காழி அரசு மருத்துவமனையில் அம்பேத்கர் பிறந்-தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடை பெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவர்பானுமதி தலைமை தாங்கினார்.

நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், துணைத்-தலைவர் சுப்ப-ராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபா-கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அருண்ராஜ்குமார்
 
வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை பன்னீர்செல்வம் எம்.எல். ஏ. கலந்துகொண்டு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன்,

மாவட்ட நிர்வாகி சொல்ல முத்துக்குமார், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

முடிவில் லேப் டெக்னீசியன் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். தொடர்ந்து உழவர் சந்தை முன்பு அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அன்னதானம்

வழங்கினார்.

Tags:    

Similar News