உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சூரியகாந்தி விதை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-04-16 12:01 IST   |   Update On 2022-04-16 12:01:00 IST
சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78.49க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.46க்கும், சராசரியாக ரூ.70.19.க்கும் விற்பனையானது.
வெள்ளக்கோவில்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சூரியகாந்தி விதை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஈரோடு, கரூர், சேலம், திண்டுக்கல், திருப்பூர்உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 68 விவசாயிகள் தங்களுடைய 998 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.

இவற்றின் எடை 48,596 கிலோ. காரமடை, ஈரோடு, வெள்ளக்கோவில், முத்தூர் நடுப்பாளையம், காங்கயத்தில் இருந்து 7 வணிகர்கள் விதைகளை வாங்க வந்திருந்தனர்.

சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78.49க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.46க்கும், சராசரியாக ரூ.70.19.க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 33.76 லட்சம். 

அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தார். கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து பாதிக்கும்மேல் குறைந்த நிலையில் விலை கிலோவுக்கு 8 ரூபாய் உயர்ந்தது.

Similar News