உள்ளூர் செய்திகள்
உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காட்சி.

வேலூரில் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை

Published On 2022-04-14 15:35 IST   |   Update On 2022-04-14 15:35:00 IST
வேலூரில் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
வேலூர்:

வருடந்தோரும் ஏப்ரல் 14&ந் தேதி தேசிய தீயணைப்புத்துறையில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலைய வளாகத்தில் தீவிபத்து மற்றும் மீட்பு அழைப்புகளில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணுக்கு, வேலூர் வடமேற்கு மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

வேலூர் மாவட்ட அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட அலுவலர் சரவணன், உதவி மாவட்ட அலுவலர் தலைமையகம் முகுந்தன் மற்றும் வீரர்கள் மலர் வளையம் வைத்துவீரவணக்கம் செலுத்தினர். மேலும், இன்று முதல் 20&ந் தேதி வரை தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

Similar News