உள்ளூர் செய்திகள்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் இன்று தங்க கவச அலங்காரத்தில் பாலமுருகன் அருள் பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனை வருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப் பட்டது. வள்ளி மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இன்று தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலையிலேயே மூலவர் சாமி சன்னதிகளில் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது.
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் பேரி சுப்பிரமணியசாமி கோவில்களில் இன்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. பாலமதி முருகன் கோவில் தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.