உள்ளூர் செய்திகள்
ரோப்கார் சோதனை ஓட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

சோளிங்கரில் ரோப்கார் சோதனை ஓட்டம்

Published On 2022-04-14 15:17 IST   |   Update On 2022-04-14 15:17:00 IST
சோளிங்கரில் ரோப்கார் சோதனை ஓட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் (திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். 

மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும். இந்த கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

மலை மீது 1,305 படிகளை கடந்து சென்று அமிர்தவள்ளி தாயார் சமேத யோக நரசிம்மரை தரிசனம் செய்ய முடியும். செங்குத்தான மலை மீது படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். டோலி மூலம் தொழிலாளர்கள் பக்தர்களை சுமந்து செல்ல வசதி இருந்தாலும், ரோப் கார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்காக, கடந்த 2014&ம் ஆண்டு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப் கார் அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றது. ரோப் கார் சோதனை ஓட்டம் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. 

அமைச்சர் ஆர்.காந்தி ஜெகத்ரட்சகன் எம்.பி., முனிரத்தினம் எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் மாவட்ட குழு துணை தலைவர் எஸ் எம் நாகராஜ் திமுக ஒன்றிய செயலாளர் செல்வம் அவைத் தலைவர் அசோகன் நகராட்சி உறுப்பினர் மோகனா சண்முகம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் உறுப்பினர்கள் சாவத்திரி பெருமாள் மாரிமுத்து சோளிங்கர் நகராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News