உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரம் வழங்க கோரிக்கை

Published On 2022-04-14 15:06 IST   |   Update On 2022-04-14 15:06:00 IST
மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் நாளை முதல் மீன்பிடித் தடைக்காலம் கடை பிடிக்கப்படுகிறது. இதற்காக மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று மாலைக்குள் அனைத்து மீனவர்களும், தங்களது படகுகளுடன் கட்டாயமாக கரை திரும்பும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் துறைமுகங்களி லிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்றன. இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை  பெறுகின்றனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல், ஜுன் மாதம் 15-ந் -தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் கடை பிடிக்கப்படுகிறது. இக்காலங்களில் மீனவர்கள் வேலைக்கு செல்லாமல் படகு, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணிகளை செய்து வருகின்றனர். தடைக்காலத்தின் போது மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ 5 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்-படுகிறது.

இந்நிலையில் தற்போது உள்ள விலைவாசியில் அரசு வழங்குகின்ற 5 ஆயிரம் போதாது என்றும், அதை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் கூறுகையில் மீன்களின் இனப்பெருக்கத்-திற்காக ஆண்டுதோறும் இரண்டு மாத காலங்கள் தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இது வரவேற்கதக்கதாக இருந்தாலும், தடைக்காலங்களில் மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உள்ளது.

மேலும் இந்த 60 நாட்களில் மீனவர்கள் நாங்கள் வாழ்வாதாரத்திற்-காக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம் எனவே தற்போது உள்ள விலை வாசிக்கு அரசு வழங்குகின்ற 5 ஆயிரம் போதாது அதனை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

தடைக்காலங்களில் விசைப்படகுகள் இயக்கப்படாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. இரண்டு மாத காலத்திற்கு எஞ்சின் இயக்கப்படாமல் இருப்பதால் அவைகள் எளிதில் பழுதாகிவிடுகிறது. இதனை சரிசெய்ய சுமார் இரண்டிலிருந்து மூன்று லட்சம் வரை செலவாகிறது. எனவே அரசு மீனவர்களின் நிலையை அறிந்து விசைப்படகிற்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News