உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்

சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2022-04-14 14:55 IST   |   Update On 2022-04-14 14:55:00 IST
சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினருடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி அருகே த ருவரங்குளம் மணியம்பள்ளம் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக உள்ள நிலையில், சாலையை சீரமைத்து தரக்கோரி கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இதனால் திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் சொர்ணக்குமார், துணை செயலர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினருடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக அலுவலர்கள் உறுதியளித்தனர்.

இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் வேப்பங்குடி பழ கருப்பையா, பிஜேபி ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், தெட்சிணாமூர்த்தி, தி.மு.க. சார்பில் காயாம்பு, திருவரங்குளம் ஒன்றிய கவுன்சிலர் திருவரங்குளம் ஊராட்சி மன்றத் தலைவ மற்றும்  கருப்பையா ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News