உள்ளூர் செய்திகள்
சமுதாயநல கூடம், நூலகத்தை திறக்க வேண்டும்- அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் மனு
உருளையன்பேட்டை ராஜாநகர் சமுதாயநல கூடம், நூலகத்தை திறக்க வேண்டும் என தி.மு.க.வினர் அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை ராஜா நகரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் குளிரூட்டும் வசதியுடன் கூடிய சமுதாய நலக்கூடம் மற்றும நூலகமும் கட்டப்பட்டு திறக்கப்பட்டது
ஆனால், திறக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இந்த கட்டிடங்களை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை உருளையன்பேட்டை தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கோபால் சட்டசபையில் அமைச்சர் சந்திர பிரியங்காவை சந்தித்து கொடுத்தார்.
அப்போது தி.மு.க. மாநில துணை அமைப்பாளர் குணா திலீபன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், சொல்தாரவி, தொகுதி இளைஞரணி அமைப்பாளர் தாமரைக்கண்ணன், கிளை செயலாளர்கள் அகிலன், தட்சிணாமூர்த்தி, விஜயகுமார், வெங்கட், சசிகுமார், புருஷோத்தமன், கந்தசாமி, இருதயராஜ், சரவணன், முத்து, ஐசக் மற்றும் அஜி பாஷா, பாக்கியராஜ், அந்தோணி, கிரி, நெல்சன், பிரகாஷ், கந்தன், மூர்த்தி, சாலமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.