உள்ளூர் செய்திகள்
பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தரின் படத்தை படத்தில் காணலாம்,

முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

Published On 2022-04-12 15:44 IST   |   Update On 2022-04-12 15:44:00 IST
முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆதனக்-கோட்டை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தினசரி மண்டகப்படி தாரர்களால் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு கோவில் எதிர்புறம் உள்ள கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது திருவிழாவை-யொட்டி பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பால்-குடம், தொட்டில் காவடி பறவைக் காவடி, அலகு குத்துதல் மற்றும் தங்களின் பல்வேறு நேர்த்திக் கடன்களை அம்பாளுக்கு செலுத்-தினார்கள்.

நேற்று இரவு அம்மன் யாளி வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதனக்கோட்டை மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்-கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மண்டகப்படி தாரர்கள், விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தன.ர்பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வ-கோட்டை ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்.

Similar News