உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை நகர மன்றத்தின் அவசர கூட்டம் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நடந்த காட்சி.

ராணிப்பேட்டை நகரசபை கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் வெளிநடப்பு

Published On 2022-04-12 15:28 IST   |   Update On 2022-04-12 15:28:00 IST
ராணிப்பேட்டை நகரசபை கூட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை நகர மன்றத்தின் அவசர கூட்டம் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் வி.சி.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். 

நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது தமது அறிக்கையில் 2022-&2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் ஆணையத்தின் பரிந்து-ரையின் அடிப்படையில் மான்யம் பெறுவதற்கான தகுதியினை பெறும் பொருட்டு 2021-&2022 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி  வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

மேலும் ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ரூத் 2.0 ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளது.

எனவே அதன் அடிப்படையில் ராணிப்-பேட்டை நகராட்சி எல்லைக்-குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு  வரி உயர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்-படுகிறது என்ற ஒரு தீர்மானம் வாசிக்கப்பட்டது.

மேற்கண்ட இந்த தீர்மானத்தின் மீது உள்ள சொத்துவரி உயர்வை கண்டித்து 3 அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத் கவுன்சிலர்கள் அப்துல்லா, கிருஷ்ணன், தென்றல் ஜெய்கணேஷ் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் கடன் சுமை 35.7 கோடி உள்ளதாலும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும் பணம் பற்றாக்குறை கருத்தில் கொண்டும் நகரமன்ற 30 வார்டுகளில் பல்வேறு பணிகள் நிறைவேற்ற சொத்து வரி உயர்வு அவசியம் என்று தீர்மானத்தையொட்டி இந்த தீர்மானம் நிறைவேற்-றப்பட்டது.

Similar News