உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2022-04-12 15:27 IST   |   Update On 2022-04-12 15:27:00 IST
அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்:

ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சென்னை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமரனுக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் அவரது தலைமையில் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார்  பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.

 அப்போது ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்த போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை சோதனை செய்தபோது சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

 கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.  கடந்த ஒரு வாரத்தில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் சுமார் 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர் என்று தொ¤வித்தனர்.

Similar News