உள்ளூர் செய்திகள்
அரசு திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும்
அரசு திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
75-வது சுதந்திர தினவிழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பிறகு நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும் போது, இந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்த தியாகிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தேசிய மற்றும் மாநில அளவிலான சுதந்திரப் போராட்ட தியாகிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கண்காட்சி அரங்குகள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரால் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், இக்கண்காட்சியை பார்வையிட வருகை தரும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்தும் தெரிந்துகொள்வதன் மூலம் அவர்களின் குறைகளை தீர்க்க இயலும்.
வரும் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.