உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு அமைச்சர்கள் ஆடுகள் வழங்கிய காட்சி.

பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-04-11 12:02 IST   |   Update On 2022-04-11 12:02:00 IST
பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
 
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் ஊராட்சியில், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா-கிருஷ்ணன், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, 

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய-நாதன்  ஆகியோரது முன்னி-லையில் பயனாளிகளுக்கு வெள்ளாடு-கள்,- செம்மறியாடுகளை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரகுபதி  பேசியதாவது, இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆடுகளின் எண்ணிக்கை வருங்-காலங்களில் அதிகரித்து, அவற்றை விற்பனை செய்வதன் மூலம் பயனாளிகள் அனைவரும் தங்களை தொழில் முனைவோராக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ததுடன், புதிதாக தொழில் தொடங்க புதிய கடன்களையும் வழங்கி வருகிறார்கள். எனவே மகளிர்கள் அனைவரும் இத்திட்டங்கள் மூலம் தங்கள் வாழ்-வாதாரத்தை மேம்-படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும்போது,  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு 1,300 பெண் பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 6,500 வெள்ளாடுகள்,

செம்மறியாடுகள் ரூ.2,27,50,000 மதிப்பீட்டிலும்,  காப்பீட்டுக் கட்டணம் ரூ.7,02,975 மதிப்பீட்டிலும்,   தீவன செலவு ரூ.13,00,000 மதிப்பீட்டிலும், சில்லறை செலவினம் ரூ.97,500 மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் ரூ.2,48,50,475 மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்-பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஆடுகள் பெற்ற பயனாளிகள் அனைவரும் ஆடுகளை முறையாக வளர்த்து தங்களை ஒரு தொழில் முனை-வோராக மாற்றிக்-கொண்டு சமுதாயத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.

அமைச்சர் மெய்யநாதன்  பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர்  விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய கணவனை இழந்த பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்  பெண் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்-படுத்தப்படுகிறது.

இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,300 குடும்பங்களை சார்ந்த பெண்கள் பயன்பெறுவர். எனவே இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களை தொழில்முனைவோராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
 

Similar News