உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மதுரை சித்திரை திருவிழாவிற்காக இன்று மாலை வைகை அணையில் தண்ணீர் திறப்பு

Published On 2022-04-11 06:15 GMT   |   Update On 2022-04-11 06:15 GMT
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையிலிருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி:

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்றது.

எனவே இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மதுரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் நகர்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முக்கிய விழா-வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 16ம் தேதி நடைபெறுகிறது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இதில் கடந்த சில மாதங்களாகவே அணை நிரம்பி காணப்படுகிறது. எனவே தண்ணீர் திறப்பதில் சிக்கல் இருக்காது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல் 2 நாட்களுக்கு 750 கனஅடி நீர் திறக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்படும். 16ம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News