உள்ளூர் செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்ட குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த குருத்தோலை பவனி ஊர்வலத்தை தச்சன்குறிச்சி பங்குத்தந்தை பால்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கந்தர்வகோட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் நிறைவடைந்தது.
பிறகு புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் டிவி சபரிராஜன், சேவியர், அருட்சகோதரிகள் மற்றும் கிறித்தவ பெருமக்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.