உள்ளூர் செய்திகள்
அண்ணா மறுமலர்ச்சி திட்ட கணக்கெடுப்பு பணி தொடக்கம்
கந்தர்வகோட்டை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அ ன்டனூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட 2022& 2023 ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணியை ஒன்றிய ஆணையர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
அண்டனூர் ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களில் சாலை வசதி, தெருவிளக்குகள், குடிநீர் தேவை தொடர்பான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறுகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் தொடக்கப்பள்ளி கட்டிடங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அன்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் இளவரசன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பூங்கொடி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.