உள்ளூர் செய்திகள்
மீளாய்வுக் கூட்டம் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

அங்கீகாரம் இல்லாமல் செயல் படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

Published On 2022-04-10 12:06 IST   |   Update On 2022-04-10 12:06:00 IST
அங்கீகாரம் இல்லாமல் செயல் படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை: 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வித் தரத்துடன் உடல்நலம் சார்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களின் உயரம், எடையை கணக்கிட்டு  எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். 

மாணவர்-களின் பெற்-றோர்களிடத்தில் மாணவர்-களின் உயரம், எடை குறை-வாகவோ, அதிக-மாகவோ இருந்தால் தெரியப்படுத்த வேண்டும். பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளி சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பள்ளி செல்லாத குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். 

பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்-திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து ஆண்டு முடிவில் முறையான பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்-கொள்ளவேண்டும். இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையங்களை அதிகப்படுத்திட வேண்டும்.  

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.ஐ. பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்-கொள்ளப்படும். மாணவர்கள் காலணி அணிந்து வரும்படி ஆசிரியர்கள் வழியுறுத்த வேண்டும். மாணவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்று-கொடுக்க வேண்டும்  என கலெக்டர்  தெரிவித்தார்.

Similar News