உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை முத்துக்கடையில் 1930 என்ற புதிய எண்ணை ஆட்டோவில் விழிப்புணர்வு பிரசுரத்தை ஒட்டிய போது எடுத்த படம்.

செல்போன்களில் தேவையில்லாத செயலிகளை தொடர்பு கொள்ள வேண்டாம்- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2022-04-09 10:09 GMT   |   Update On 2022-04-09 10:09 GMT
செல்போன்களில் தேவையில்லாத செயலிகளை தொடர்பு கொள்ள வேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடையில் புதிய உதவி எண்களையும் 3 வகை ஆன்லைன் ஆப்களையும் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அறிமுகம் செய்துவைத்து  ஆட்டோ, பஸ்களில் துண்டுப் பிரசுரங்கள் ஸ்டிக்கர்களை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்-தினார். 

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை ஏ.டி.எஸ்.பி. முத்துக்கருப்பன், டி.எஸ்.பி. பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்&இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் உள்பட பலர் உடனிருந்தனர். 

பொதுமக்கள் செல்போனில் தங்களுக்கு தெரியாத செயலிக்கு செல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சனைகளை தவிர்க்கலாம். மோசடி நபர்கள் உங்கள் செல்போனுக்கு லிங்க் என்னும் ஆன்லைன் செயலியை அனுப்பி வைப்பார்கள். 

செல்போன் உபயோகிப்பாளர்கள் அதை தொட்டதும் மோசடி நபர்கள் அவர்களின் விருப்-பங்கள் அனைத்தையும் நிறை-வேற்றிக் கொள்வார்கள். பொதுமக்கள் பணத்தை மோசடி நபர்களிடம் இழக்க வேண்டாம். 

மோசடி நபர்களால் சைபர் கிரைம் மூலம் பணம் திருடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற செயலி எண்ணை பயன்படுத்தி தகவல் தெரிவித்தால் திருடப்பட்ட பணம் மோசடி நபர்கள் எடுக்காதவாறு வங்கி அதிகாரிகளால் பாதுகாத்து வைக்கப்படும்.

மேலும் குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள தடுக்க 1098 என்ற என்ற செயலி எண், மேலும் காவல்துறையின் அவசர உதவிக்கு க்யூ ஆர் கோடு காவல் உதவி ஆப் பயன்படுத்தினால் உடனடியாக காவல் துறையில் உதவி கிடைக்கும் என போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்தார்.
Tags:    

Similar News