உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

இளம் பெண் மர்மச்சாவு

Published On 2022-04-09 15:10 IST   |   Update On 2022-04-09 15:10:00 IST
பெண் தூக்கிட்டு இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி கண்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 30). இவரது மனைவி அழகுராணி(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அழகு ராணி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றி அவரின் தாயார் ரகுநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. மகளின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், பரம்பகுடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அழகுராணிக்கு வரதட்சணை கொடுமை ஏதும் இழைக்கப்பட்டதா? என உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.  

Similar News