உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவ, மாண-வியர்களுக்கான இலவச திறன்வளர் பயிற்சி
கல்லூரி மாணவ, மாண-வியர்களுக்கான இலவச திறன்வளர் பயிற்சி முகாம் நடைபெற்றது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாண-வியர்களுக்கான இலவச திறன்வளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.முகாமை கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
முகாமில் வலைத்தள வடி-வமைப்பு, பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்-பட்டது.
இம்முகாம் மூலம் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திட்ட வளர்ச்சி அலுவலர் கருப்பையா, பயிற்சி முகாமை வழிநடத்தினார். முன்னதாகக் கல்லூரி வேலைவாய்ப்பு மைய திட்ட அலுவலர் அனிதா அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
நிறைவில் திட்ட வளர்ச்சி அலுவலர் அஜித் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்-பாடுகளை அலுவலகப் பணியாளர்கள், இருபால் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.