உள்ளூர் செய்திகள்
தேனி பங்களாமேடு அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஒரு மாணவருடன் உணவு அருந்தும் கலெக்டர் முரளிதரன்.

அரசினர் மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு.

Published On 2022-04-09 06:07 GMT   |   Update On 2022-04-09 06:07 GMT
தேனி பங்களாமேடு பகுதியில், ஆதிதிராவிடர் மாணவ மாணவியர் நல விடுதிகளில் கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:

 தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ மாணவிகளின் வாழ்வினில் ஒளியேற்றிடும் வகையில் பல நல்ல திட்டங்களை வகுத்து மாணவ மாணவியர்களின் கல்வி தரம் மேம்படவும், அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்திடவும் செயலாற்றி வருகின்றார்.

குறிப்பாக அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சத்தான உணவுகளை வழங்கிடவும், தங்குமிடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும் அலுவலர்-களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேனி பங்களாமேடு பகுதியில்¢ அரசு ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, விடுதியில் உள்ள மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும் மாணவர்களின்  வருகைப்பதிவேடு, எண்ணிக்கை, வழங்கப்படும் உணவுகளின் வகைகள் ஆகியவை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விடுதி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவினை மாணவர்களுடன் சேர்ந்து உட்கொண்டார்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் தரமானதாகவும் மற்றும் விடுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் எப்பொழுதும் வைத்துக்கொள்ள வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
Tags:    

Similar News