உள்ளூர் செய்திகள்
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீசாருக்கான ரோந்து பைக்குகளை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இன்று வழங்கினார்.

வேலூரில் போலீசாருக்கு 13 புதிய ரோந்து வாகனங்கள்

Published On 2022-04-08 16:48 IST   |   Update On 2022-04-08 16:48:00 IST
வேலூரில் போலீசாருக்கு 13 புதிய ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வழங்கினார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 கார்கள் உள்பட 37 ரோந்து வாகனங்கள் உள்ளன. இன்று கூடுதலாக 13 ரோந்து பைக் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார்.

மேலும் கூடுதலாக 15 வாகனங்கள் வாங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள வாகனங்-களில் ஜிபிஎஸ் கருவிகள் அலாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த வாகனங்கள் வேலூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளதால் ரோந்து வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.

எங்காவது அசம்பாவிதம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக ரோந்து வாகனத்தில் செல்லும் போலீசாரை அனுப்பி உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News