உள்ளூர் செய்திகள்
சிங்கபெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி 3 பேர் மரணம்
சிங்கபெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி 3 பேர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:
சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டி புண்ணியம், பகத்சிங் நகரை சேர்ந்தவர்கள் மோகன் (வயது18), பிரகாஷ் (19), அசோக்குமார் (20).
இவர்கள் 3 பேரும் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நின்றனர். அப்போது அவர்கள் தங்களது செல்போனில் செல்பி வீடியோ எடுத்தனர்.
அந்தநேரத்தில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற பயணிகள் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் மோகன், அசோக்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேரும் உடல் சிதறி பலியானார்கள்.
இவர்களில் அசோக் குமாரும், பிரகாசும் கல்லூரி மாணவர்கள் ஆவர். அசோக் குமார் தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். பிரகாஷ் டிப்ளமோ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தார்.
நண்பர்கள் 3 பேரும் புதிதாக அமைக்கப்பட்ட 3-வது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துள்ளனர். ரெயில் வருவதை கவனிக்காததால் அவர்கள் விபத்தில் சிக்கிக்கொண்டனர்.
செல்பி மோகத்தில் மாணவர்கள் உள்பட 3 பேரும் உயிரை பறிகொடுத்து இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான 3 பேரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.