உள்ளூர் செய்திகள்
வாலிபரிடம் செல்போன் திருடியவர் கைது
வாலிபரிடம் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி :
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் காளிதாஸ் (21). இவர் சம்பவத்தன்று காய்கறி வாங்குவதற்காக காந்தி மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளார். பின்னர் காளிதாஸ் அருகிலிருந்த காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த குமார் (46) என்பவர் வாலிபர் காளிதாசின் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. பின்னர் காந்தி மார்க்கெட் போலீசார் செல்போன் திருடிய குமாரை கைது செய்தனர்.