உள்ளூர் செய்திகள்
அரசு கல்லூரி அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அரசு கல்லூரி அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-04-08 13:16 IST   |   Update On 2022-04-08 13:16:00 IST
அரசு கல்லூரி அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் கடந்த 2021ம் ஆண்டு ஆக. 26&ந் தேதி சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அ றிவித்தார்.

அதனை தொடர்ந்து ஆலங்குடி அருகே உள்ள, கீழாத்தூர் பகுதியில் கல் லூரி அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் மெய்யநாதன் உட்பட அதிகா ரிகள் தேர்வு செய்தனர். அப்பகுதியில் இதுவரை கட்டுமா னப்பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், இந்தாண்டு கலை அறிவி யல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

இந்நிலையில், நேற்று கல்லூரிகளுக்கான அறிக்கை கோப்புகளை ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி மாவட்ட வருவாய் அலுவலர் செல்வியிடம்  சமர்ப்பித்தார்.

இதைபெற்றுக்கொண்டு மாவட்ட வருவாய் அலு வலர் செல்வி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான இடத்தை நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தாசில் தார் கிராம நிர்வாக அலுவ லர் வருவாய் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News