உள்ளூர் செய்திகள்
தீயணைப்பு வாகனம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு நவீன வசதியுடன் தீயணைப்பு வாகனம்

Published On 2022-04-08 12:55 IST   |   Update On 2022-04-08 12:55:00 IST
அணு உலைகளின் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மேம்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்த போது அங்குள்ள பழைய தீயணைப்பு வாகனங்களை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தற்போது இந்திய அணுசக்தி துறை பாவிணி என்ற பெயரில் கூடுதலாக ஒரு அணு உலை கட்டி வருகிறது. அணு உலைகளின் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மேம்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்த போது அங்குள்ள பழைய தீயணைப்பு வாகனங்களை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நவீன வசதிகள் கொண்ட இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று முதல் பயன் பாட்டிற்கு வந்தது.

இந்த தீயணைப்பு வாகனத்தில் 120அடி உயரமான ஐடிராலிக் ஏணி, ரேடார் இணைப்புடன் கூடிய அபாயமணி, பொது மக்கள், கால்நடைகள், வாகனங்கள் மீது கதிர்வீச்சு படிந்தாலும் உடனடியாக அப்புறப்படுத்த அதிவேகமாக தண்ணீர் பீச்சி அடிக்கும் மோட்டார்கள், அணுஉலை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையின் நேரடி ஆன்லைன் தொடர்பு என புதிய நவீன வசதிகள் இதில் உள்ளன.

Similar News