உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி தலைமை வகித்தார்.
முகாமில் பங்கேற்ற ஆலங்குடி நீதிபதி நல்லக்கண்ணன், போக்சோ சட்டம், பாலியல் பிரச்னை, புகையிலை பழக்கம், குழந்தை திருமணச் சட்டம், குழந்தை தொழிலாளர், சிறுவயதில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், தொலை தொடர்பு சாதனங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள், மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுயஒழுக்கம் உள்ளிட்டவைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
முகாமில் மூத்த வழக்குரைஞர் ராஜா, தன்னார்வலர் செந்தில்ராஜா, நிர்வாக உதவியாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.